
ஆலப்புழா: கடந்த 21-ம் தேதி காலமான கேரள முன்னாள் முதல்வரும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் (101) உடல் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புன்னப்பாரா – வயலார் தியாகிகள் நினைவிடத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
ஆலப்புழாவில் அரபிக் கடலில் புதன்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு மக்கள் புடைசூழ அவருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் புன்னப்பாரா – வயலார் தியாகிகள் நினைவிடத்தில் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல் அருகே குழுமியிருந்த ‘சகாவு’கள் முழக்கமிட்டு அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் அரசு மரியாதையுடன் அவரது உடல் புதன்கிழமை இரவு 9.15 மணி அளவில் தகனம் செய்யப்பட்டது.