
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து விசிக வளர்ச்சியடைந்து இருக்கிறதே தவிர, வீழ்ச்சி அடையவில்லை என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறிய: “அதிமுகவை பாஜக விழுங்குவிடும் என மீண்டும் மீண்டும் பொறுப்புணர்வுடனும், கவலையோடும், அதிமுக பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்திலும் சுட்டிக் காட்டினோம். ஆனால், அதை அப்படியே திருப்பி விசிகவை திமுக விழுங்கிவிடும் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியிருக்கிறார். அவருக்கு இப்படித்தான் பேச வேண்டும் என யாரோ சொல்லி தருகிறார்கள். அவராகவே இப்படி சொல்கிறார் என்பதை ஏற்க முடியவில்லை.