
சென்னை: உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையையும் மீறி டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை தீர்ப்பாயம் மீண்டும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் திரைப்படத் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி லேப்டாப் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர். விக்ரம் ரவீந்திரன் வீடு மற்றும் அலுவலகத்துக்கும் சீல் வைத்தனர்.