
தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர்களுள் ஒருவராக இருந்த பவன் கல்யாண், அரசியலில் காலடி எடுத்து வைத்து தற்போது ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.
சினிமாவில் இருந்து ஓய்வு பெறாமல் துணை முதல்வராக இருந்துகொண்டே ‘Hari Hara Veera Mallu’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதுவே ‘பவன் மக்கள் பணியில் இல்லை கவனம் செலுத்துவதில்லை’ என்ற விமர்சனத்தை கிளப்பின.
ஆந்திரா மாநில எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், “பவன் கல்யாண் சினிமா ஷூட்டிங்கில்தான் இருக்கிறார். அவ்வப்போது அரசியல் பக்கம் வந்து சர்ச்சைகளைக் கிளப்பிவிடுவதுதான் அவரது வேலை” என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
‘Hari Hara Veera Mallu’ திரைப்படம் நாளை திரையரங்களில் வெளியாகவிருக்கும் நிலையில் தன் மீதான விமர்சனங்கள் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் பவன் கல்யாண், “அரசியலுக்கு வருவதற்கு முன்பே மூன்று திரைப்படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டேன். ஆனால், அரசியல் பணி தீவிரமாக இருந்ததால் அந்த மூன்று திரைப்படங்களையும் என்னால் நடிக்க முடியாமல் போனது. அதற்காக சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு அந்த மூன்று திரைப்படங்களிலும் நடித்துக் கொடுக்க முடிவு செய்தேன்.
எனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் படப்பிடிப்புக்குச் சென்றேன். அதற்குள் இவ்வளவு விமர்சனங்கள் என்மீது வைக்கிறார்கள். இம்மூன்று திரைப்படங்களையும் முடித்துவிட்டு முழுமையாக அரசியல் பணியைப் பார்ப்பேன். அதன்பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தினாலும் நிறுத்துவிடுவேன்.

சினிமாதான் எனக்கான வருமானம். அதனால், நடிப்பதை நிறுத்திவிட்டு திரைப்படங்களைத் தயாரிக்கும் பணியைச் செய்வேன். மக்கள் சேவைக்காக அரசியல், வருமானத்திற்காக சினிமா என்பதுதான் நான் தேர்வு செய்த பாதைகள்” என்று பேசியிருக்கிறார் பவன் கல்யாண்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…