
மோகன்லால், பகத் பாசில், நஸ்ரியா ஆகியோர் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
‘எம்புரான்’, ‘துடரும்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மோகன்லால் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘ஹிருதயப்பூர்வம்’. இந்தப் படத்தை சத்யன் அந்திக்காடு இயக்கியிருக்கிறார். மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார்.
கடந்த 19 ஆம் தேதி வெளியான ‘ ஹிருதயப்பூர்வம்’ படத்தின் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த டீசரில் நடிகர் பகத் பாசில் குறித்த வசனம் இடம்பெற்றிருந்தது வைரலானது. இந்நிலையில் மோகன்லால் குடும்பத்தை, பகத் பாசில், நஸ்ரியா, பகத்தின் தம்பி, மோகன்லால் மகன் ப்ரணவ் மோகன்லால் என பலரும் சந்தித்திருக்கின்றனர். இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகியிருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…