
புதுடெல்லி: சீன நாட்டவர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா வருவதற்கான விசா சேவையை, 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மீண்டும் நாளை (ஜூலை 24) தொடங்குகிறது.
இது தொடர்பாக சீனாவில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் சமூக ஊடக பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "சீன குடிமக்கள் இந்தியாவுக்கு வருகை தர சுற்றுலா விசாவுக்கு ஜூலை 24 முதல் விண்ணப்பிக்கலாம். முதலில் ஆன்லைன் முறையில் விசா கோரி விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு, இந்திய விசா விண்ணப்ப மையத்தில் விசா விண்ணப்பம் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.