
சென்னை: ராஜேந்திர சோழன் உருவாக்கிய அரியலூர் சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாடு, சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் எனப் பெரும்புகழ் எய்திய தமிழ் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையை அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடிட 2021-ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது நமது திராவிட மாடல் அரசு!