
இன்று ஜூலை 23-ம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்தநாள். இந்த பிறந்தநாள் ஸ்பெஷலாக ஆர்.ஜே.பி. இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘கருப்பு’ படத்தின் டீசரை வெளியிட்டிருந்தது படக்குழு.
ஒருபக்கம் வழக்கறிஞர், மறுபக்கம் கிராமத்து கருப்பு என அதிரடி ஆக்ஷன் திரில்லராக ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படமாக வந்திருக்கிறது டீசர். `கருப்பு’ படத்தில் த்ரிஷா, யோகி பாபு, நட்டி நட்ராஜ், ‘லப்பர் பந்து’ சுவாஸ்விகா, ‘நெடுஞ்சாலை’ ஷிவதா, மலையாள நடிகர் இந்திரன்ஸ் என பலரும் நடித்துள்ளனர். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சாய் அபயங்கர் பின்னணி இசையமைத்திருக்கிறார்.
Suriya : டீசர், டைட்டில், ரீ-ரிலிஸ்… 50வது பிறந்தநாளில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்!
பிறந்த நாளையொட்டி வாழ்த்துகளை வாரி வழங்க, சூர்யாவின் வீட்டு முன்பு ரசிகர்கள் குவிய, வெளியே வந்து கை அசைத்து வாழ்த்துகளை பெற்று செல்ஃபி எடுத்துக்கொண்டார் சூர்யா. இதைத்தொடர்து திரையுலகில் இருக்கும் பலரும் நடிகர் சூர்யாவிற்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அவ்வகையில் ‘நாம் தமிழர் கட்சி’ ஒருங்கிணைப்பாளர் சீமான், “தம்முடைய அபார நடிப்பாற்றலால் ஏற்ற கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்து மக்களை மகிழ்விக்கும் தமிழ்த்திரையுலகின் முன்னணி திரைக்கலைஞர்! அரசே மதுவினை விற்று தமிழ்ப் பிள்ளைகளைக் குடிக்கவைத்துச் சீரழித்துவரும் கொடுமையான காலக்கட்டத்தில், தனி ஒரு மனிதனாக அகரம் கல்வி அறக்கட்டளை மூலமாக, கல்வி கற்க வசதியற்ற ஏழ்மை நிலையிலுள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து உயர்கல்விவரை படிக்க வைக்கும் பெரும்பணி புரியும் ஆருயிர் இளவல் சூர்யா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
தம்முடைய அபார நடிப்பாற்றலால் ஏற்ற கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்து மக்களை மகிழ்விக்கும் தமிழ்த்திரையுலகின் முன்னணி திரைக்கலைஞர்!
அரசே மதுவினை விற்று தமிழ்ப் பிள்ளைகளைக் குடிக்கவைத்துச் சீரழித்துவரும் கொடுமையான காலக்கட்டத்தில், தனி ஒரு மனிதனாக அகரம் கல்வி அறக்கட்டளை மூலமாக, கல்வி… pic.twitter.com/aY8Qk2JwsN
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) July 23, 2025
அப்பா சிவக்குமார் தொடங்கிய அறப்பணியை இரண்டாம் தலைமுறையாக தொய்வில்லாமல் தொடர்ந்து, நல்லதொரு தலைமுறையை நாட்டிற்கு உருவாக்கித் தருகின்ற போற்றுதற்குரிய பொதுத்தொண்டு புரியும் ஆருயிர் இளவல் சூர்யா அவர்கள், நல்ல உடல் நலத்துடனும், உள்ள மகிழ்வுடனும் இன்னும் பற்பல ஆண்டுகள் வாழ்வாங்கு வாழ்ந்து, அரும்பணிகள் யாவும் தொடர்ந்து சிறப்புற ஆற்றிட வாழ்த்துகிறேன்!” என்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…