
பெங்களூரு: பெங்களூரு சர்வதேச‌ விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் போதைப் பொருள் கடத்தல் நடைபெறுவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பெங்களூரு மண்டல அதிகாரிகள் விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது குவாஹாட்டியில் இருந்து பெங்களூரு விமானத்தில் வந்த 2 இளம்பெண்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களின் உடைமைகளை அதிகாரிகள் பரிசோதித்தனர். அவர்களின் பெட்டியில் வழக்கத்துக்கு மாறாக, 40-க்கும் மேற்பட்ட சோப்புகள் இருந்தன.