
இன்ஸ்டாகிராம் தனது பயனர்களுக்கு மேலும் வசதியான அனுபவத்தை வழங்க, ரீல்ஸுக்கான புதிய ஆட்டோ ஸ்க்ரோல் அம்சத்தை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் பயனர்கள் ஸ்க்ரோல் செய்யாமலே ரீல்ஸை தொடர்ச்சியாக பார்க்க உதவுகிறது.
இந்த புதிய அம்சத்தின் மூலம், ஒரு ரீல் முடிந்தவுடன் அடுத்த ரீல்ஸ் தானாக வருகிறது. இது பயனர்கள் ஸ்வைப் செய்ய வேண்டிய தேவையை நீக்கி, வசதியான அனுபவத்தை வழங்குகிறது.
Instagram Auto-scroll : எப்படி பயன்படுத்துவது?
இன்ஸ்டாகிராமில் ஏதேனும் ஒரு ரீலைத் கிளிக் செய்யவும்.
ரீலின் கீழ்-வலது மூலையில் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.
மெனுவிலிருந்து “Auto-scroll” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்த அம்சம் இயக்கப்பட்டவுடன், பயனர்கள் தடையின்றி அடுத்தடுத்த ரீல்களைப் பார்க்க முடியும். தற்போது இந்த அம்சம் ஐபோன் பயனர்களுக்கு மட்டும் சோதனைக் கட்டத்தில் உள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு விரைவில் இந்த அம்சம் விரிவாக்கப்படும் என இன்ஸ்டாகிராம் உறுதிப்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராமின் மற்ற புதிய அம்சங்கள்
ஆட்டோ ஸ்க்ரோல் தவிர, இன்ஸ்டாகிராம் பயனர் அனுபவத்தை மேம்படுத்த பல புதிய அம்சங்களை உருவாக்கி வருகிறது.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எளிதாக மேம்படுத்த அம்சங்கள் கொண்டுவரவுள்ளன.
பயனர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஃபீடை மாற்றியமைக்கலாம்.
இந்த புதிய அம்சங்கள் இன்ஸ்டாகிராமை சமூக ஊடகத் தளங்களில் முன்னணியில் வைத்திருக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயனர் கருத்துகளைப் பெற்று, இந்த அம்சங்களை மேலும் மேம்படுத்த இன்ஸ்டாகிராம் திட்டமிட்டுள்ளது.