
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படம், ‘பராசக்தி’. இது அவருடைய 25-வது படம். இதில் வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார். ஸ்ரீலீலா, அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். பீரியட் படமான இது, கல்லூரி பின்னணியில் நடக்கும் இந்தி எதிர்ப்பு கதையைக் கொண்டது என்று கூறப்படுகிறது. இதன் அடுத்தகட்டப் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் சமீபத்தில் தொடங்கியுள்ளது.