
சென்னை: வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணிக்கு வருமாறு அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி விடுத்த அழைப்பை தவெக தலைவர் விஜய்யும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் உடனே நிராகரித்தனர். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "திமுகவை தோற்கடிக்க ஒருமித்த எண்ணம் கொண்ட அனைத்து கட்சிகளும் அதிமுகவுடன் கைகோக்க வேண்டும்.
இது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் பொருந்தும். இதுவரை தவெகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை" என கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் கொள்கை விளக்க மாநாடு பற்றிய புகைப்படம் தவெகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.