
சென்னை: குரூப்-4 தேர்வு முடிந்து அனைத்து தேர்வு மையங்களிலிருந்தும் விடைத்தாள் கட்டுகள் ஜூலை 14-ம் தேதியே பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுவிட்டன. எந்த மையத்திலும் பிரச்சினை ஏற்படவில்லை என டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் 3,935 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு ஜூலை 12-ம் தேதி (சனிக்கிழமை) நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய இத்தேர்வை 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர்.