
இங்கிலாந்து நிறுவனம் ஒன்றை ஹேக்கர்கள் `ஹேக்’ செய்ததால், கிட்டத்தட்ட 700 ஊழியர்கள் வேலையை இழந்திருக்கின்றனர்.
158 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இங்கிலாந்து போக்குவரத்து நிறுவனம் KNP Logistics. இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர், தனது கம்பியூட்டரின் பாஸ்வேர்ட்டை எளிமையாக வைத்திருக்கிறார்.
அதனைக் கண்டுபிடித்த `அகிரா’ என்ற ஹேக்கர் குழு, அந்த நிறுவனத்தின் டேட்டாக்களை எல்லாம் திருடி, பணம் தருமாறு நிறுவனத்திற்கு மிரட்டல் விடுத்திருக்கிறது.
அதிக பணத்தைத் திரட்டிக்கொடுக்க முடியாத அந்நிறுவனம், தனது நிறுவனத்தையே இழுத்து மூடி இருக்கிறது.
இதனால் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த 700 ஊழியர்கள் வேலையை இழந்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் இங்கிலாந்து ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சைபர் கிரிமினல்களின் இத்தகைய அபாயகர தாக்குதல்கள், நிறுவனங்கள் தங்கள் கடவுச்சொற்கள் மற்றும் சைபர் பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.