
சென்னை: ஆடி அமாவாசையை முன்னிட்டு, சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள் நாளை இயக்கப்பட உள்ளன. தமிழகம் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூரில் இருந்து பொதுமக்கள் ராமேசுவரத்துக்கு சென்று, தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவார்கள். இதன்படி, ஆடி அமாவாசை தினத்தில் ராமேசுவரத்துக்கு அதிக அளவில் மக்கள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து ராமேசுவரத்துக்கு நாளை (ஜூலை 23) கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மறுமார்க்கமாக, ராமேசுவரத்தில் இருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர், பெங்களூருக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.