
ஏமன் நாட்டைச் சேர்ந்த மஹ்தி என்பவரின் கொலை வழக்கில் அந்நாட்டு நீதிமன்றத் தீர்ப்பின்படி மரண தண்டனைக்குள்ளான கேரள நர்ஸ் நிமிஷா பிரியா, ஜூலை 16-ம் தேதி தூக்கிலிடப்படுவதாக இருந்தது.
மத்திய அரசு தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற முடியவில்லை.
பின்னர், கேரளாவின் ‘கிராண்ட் முஃப்தி’ என அழைக்கப்படும் காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் என்பவர் இந்த மரண தண்டனையை நிறுத்த வேண்டி ஈரானின் உலகப் புகழ்பெற்ற சூஃபி அறிஞர் ஹபீப் உமர் பின் ஹஃபீஸை தொடர்புகொள்ள, அவர் தரப்பினர் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் ஏமன் ஜனாதிபதியிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் முடிவில் நிமிஷா பிரியா மரண தண்டனை தேதி குறிப்பிடாமல் நிறுத்திவைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து குறித்து கடந்த 10 நாள்களாக இதில் பேச்சுவார்த்தை நடைபெற்று நிலையில், நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இதில் பேச்சுவார்த்தை நடத்திய Global Peace Initiative அமைப்பின் தலைவர் டாக்டர் கே.ஏ. பால், நிமிஷா பிரியா விரைவில் இந்திய அழைத்து வரப்படுவார் என்று கூறியதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.