
விழுப்புரம்: “தீமைக்கு மாற்று தீமை கிடையாது” எனக் கூறி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிராகரித்துள்ளார்.
விழுப்புரத்தில் இன்று (ஜூலை 22) அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பாஜகவை வீழ்த்த வேண்டும் எனக் கூறி ஓர் அணியும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என மற்றொரு அணியும் உள்ளது. அவர்கள் ஓரணி என்கின்றனர். நாங்கள் மட்டுமே ஓரே அணியாக உள்ளோம். திமுகவை வீழ்த்த அதிமுக அழைப்பு என்பது தீமைக்கு மாற்று தீமை கிடையாது. நெருப்பை, நெருப்பை வைத்து அணைப்பது கடினம். தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள், தேசிய கட்சிகளின் தேவையை ஏன் ஏற்படுத்துகின்றனர். மக்களின் தேவையை அதிகாரத்தில் இருந்தவர்கள் நிறைவேற்றி இருந்தால், தமிழக மண்ணுக்கு தேசிய கட்சிகள் வரவேண்டிய, வளர வேண்டிய நிலை ஏன் உருவாகிறது?