
சென்னை: “திமுக உறுப்பினர் சேர்க்கையைத் தடுக்க நினைத்த அதிமுக, பாஜகவின் சதி செயலை நீதிமன்றமே முறியடித்த பின்னும், “சீப்பை ஒளித்து வைத்துவிட்டு கல்யாணத்தை நிறுத்தி விட்டோம்” என்ற வகையில் ஓடிபி பெறுவதை தடுத்து விட்டோம் என கூப்பாடு போடுவது வேடிக்கை” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழ்நாட்டின் மண் மொழி மானம் காத்திடும் பொருட்டு ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையை முதல்வர் ஸ்டாலின் ஜூன் 1-ம் தேதி தொடங்கி வைத்தார். அவர் தொடங்கி வைத்த நாள் முதல் மத்திய பாஜக அரசின் வஞ்சக சூழ்ச்சியையும், அடிமை அதிமுகவின் துரோகங்களையும் கண்டு வெறுத்துப் போய் இருக்கும் தமிழக மக்கள், முதல்வர் பின்னால் ஓரணியில் தமிழ்நாடு என அணி அணியாய் அணி வகுத்து நிற்கத்தொடங்கினர்.