
8 மணி நேர வேலை காரணமாக சந்தீப் வங்காவின் ‘ஸ்பிரிட்’ படத்தில் இருந்து தீபிகா படுகோன் வெளியேறி இருந்தார். அப்போது பாலிவுட்டில் அது பரவலாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்திய பதிப்பிற்கு பேட்டி அளித்த வித்யா பாலனிடம் தீபிகா படுகோனின் இந்த செயல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், “தாய்மார்கள் குறைந்த மணி நேரங்கள், நெகிழ்வு நேரங்களில் வேலை செய்வதற்கான உரையாடல்கள் தற்போது அனைத்து துறைகளிலும் நடந்து வருகிறது.
அவை நியாயமான உரையாடல்கள் என்று நான் நினைக்கிறேன். குழந்தைகள் பெற்றெடுக்கும் ஆரம்ப ஆண்டுகளில் புதிய தாய்மார்கள் அல்லது பெண்களை நாம் இழக்காமல் இருக்க ஒவ்வொரு துறையும் அந்த நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன.
பெண்களுக்கு நெகிழ்வான வேலை நேரங்கள் இருப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். நான் நடிக்கும் படங்களில் எட்டு மணி நேரம் மட்டும் வேலை செய்தால் போதாது. நான் ஒரு தாய் அல்ல. அதனால், என்னால் 12 மணிநேர ஷிஃப்ட்டில் பணிபுரிய முடியும்” என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…