
‘உபேன்னா’ படத்தை இயக்கிய இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், சிவ ராஜ்குமார், ஜான்வி கபூர் போன்றோர் ‘பெத்தி’ படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்கள். நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு ஏ.ஆர். ரஹ்மான் இந்தத் தெலுங்கு படத்திற்கு இசையமைக்கிறார்.
சிவ ராஜ்குமார் கடைசியாக பாலைய்யாவின் ‘கௌதமிபுத்ர சதகர்ணி’ படத்தில் கேமியோ செய்திருந்தார்.
தற்போது இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு டோலிவுட் பக்கம் மீண்டும் வந்திருக்கிறார்.
இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி, படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்படத்திற்காக நடிகர் ராம் சரண் தனது உடலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மெருகேற்றியிருக்கிறாராம்.
சமீபத்தில் ஜிம்மிலிருந்து இவர் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியிருந்தது.
படத்திற்காக உடலை மெருகேற்றியதுடன், நீண்ட தலைமுடி, தாடி எனத் தனது தோற்றத்தையும் மாற்றியிருக்கிறார்.
‘பெத்தி’ திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படப்பிடிப்பை நீண்ட நாட்கள் நடத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.
இத்திரைப்படம் ராம் சரணின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அடுத்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

சமீபத்தில் இத்திரைப்படம் தொடர்பாக ரசிகர்களுடன் நடந்த சந்திப்பில் ராம் சரண், “நான் நடித்த தனித்துவமான ஸ்கிரிப்ட்களில் இத்திரைப்படத்தின் கதையும் ஒன்று.
ஒருவேளை இது ‘ரங்கஸ்தலம்’, ‘ஆர்.ஆர்.ஆர்’ படங்களைவிட அதிகமாக உங்களுக்குப் பிடிக்கலாம்.
நான் பொதுவாக ஒவ்வொரு படத்திற்கும் இப்படிச் சொல்வதில்லை” எனப் பேசியிருந்தார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…