• July 22, 2025
  • NewsEditor
  • 0

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வரும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலை​வரு​மான வி.எஸ்​.அச்​சு​தானந்​தன் (101) உடல்​நலக் குறை​வால் நேற்று கால​மா​னார். பின்​தங்​கிய மக்​களின் உரிமை​களுக்​காக வாழ்​நாள் முழுவதும் போராடிய​வரும் கேரள அரசியலில் முக்​கிய இடத்தை வகித்​தவரு​மான வி.எஸ்​.அச்​சு​தானந்​தன், கடந்த 2019-ல் பக்​க​வாதத்​தால் பாதிக்​கப்​பட்​டதை தொடர்ந்து பொது வாழ்க்​கை​யில் இருந்து வில​கி​னார்.

கடந்த 2021 ஜனவரி​யில் நிர்​வாக சீர்​திருத்த குழு தலை​வர் பதவி​யில் இருந்து வில​கி​னார். திரு​வனந்​த​புரத்​தில் உள்ள தனது மகன், மகள் வீட்​டில் ஓய்வு எடுத்து வந்​தார். இந்​நிலை​யில் கடந்த ஜூன் 23-ம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்​பட்​டதை தொடர்ந்து திரு​வனந்​த​புரத்​தில் உள்ள ஒரு தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *