• July 22, 2025
  • NewsEditor
  • 0

2022-ம் ஆண்டில் இருந்து நேற்று வரை, துணை குடியரசுத் தலைவராக இருந்து வந்தார் ஜக்தீப் தன்கர்.

‘உடல்நலத்தை முன்னுரிமைப்படுத்தவும், மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 67(அ) இன் படி, நான் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக ராஜினாமா செய்கிறேன்’ என்று நேற்று ஜக்தீப் தன்கர் தனது ராஜினாமாவை அறிவித்தார்.

ஜக்தீப் தன்கர்

இவரது பதவிகாலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளது. இந்த நிலையில், ஜக்தீப் தன்கர் திடீரென்று ராஜினாமா செய்துள்ளது அடுத்த துணை குடியரசுத் தலைவர் யார் என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.

அதுவரை…

அடுத்த துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை, ராஜ்யசபாவின் துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் துணை குடியரசுத் தலைவர் ஆற்ற வேண்டிய அலுவல் பணிகளைத் தொடர்வார்.

பிறகு என்ன நடக்கும்?

அடுத்து, தேர்தல் ஆணையம் துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தலை அறிவிக்கும். இந்த தேர்தல் எவ்வளவு விரைவாக நடக்குமோ, அவ்வளவு சீக்கிரம் நடத்தப்படும். ஆனால், இந்தத் தேர்தல் அடுத்த 60 நாள்களுக்குள் நடந்து முடிந்துவிட வேண்டும்.

துணை குடியரசுத் தலைவர் ஆக என்ன தகுதிகள் வேண்டும்?

35 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

ராஜ்யசபா உறுப்பினராகும் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

ஹரிவன்ஷ் நாராயண் சிங்
ஹரிவன்ஷ் நாராயண் சிங்

யார் அடுத்த துணை குடியரசுத் தலைவராக வாய்ப்பு?

அடுத்த துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் அனுபவம் உள்ளவராகவும், நம்பகமானவராகவும், சர்ச்சைகளில் சிக்காதவராகவும் இருப்பார் என்று பாஜக தரப்பில் கூறப்படுகிறது.

இவை தற்போதைய ராஜ்யசபாவின் துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கிற்கு பொருந்தும். அதனால், இவர் அடுத்த துணை குடியரசுத் தலைவர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.

2020-ம் ஆண்டு முதல் இந்தப் பதவியை வகித்து வரும் இவர், பாஜகவின் நம்பிக்கையை பெற்றுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *