
சென்னை: ‘தமிழகம் முழுவதுமே, அரசுப் பள்ளிக் கட்டிடங்களின் மேற்கூரை இடிந்து விழும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. அரசுப் பள்ளி குழந்தைகளின் உயிர் தமிழக அரசுக்கு அத்தனை இளக்காரமாகப் போய்விட்டதா?’ என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம், ரூ.64.33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்ட, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை கடந்த 20-ம் தேதி இடிந்து விழுந்திருக்கிறது.