
சென்னை: தென் மாவட்டங்களில் உள்ள தொகுதிவாரியாக அமமுக நிர்வாகிகளுடன் வரும் ஜூலை 25-ம் தேதி முதல் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்த உள்ளார். தேர்தலை எதிர்கொள்வதற்காக தென் மாவட்ட தொகுதிகள் வாரியாக அமமுக நிர்வாகிகளுடன் தினகரன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக அமமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: சிவகங்கை மாவட்டம், சிவங்கை தொகுதியில், 25-ம் தேதி காலை 10 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள ராஜ் மஹாலில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். 26-ம் தேதி, மாலை 4 மணிக்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில், மேலக்கோட்டையில் உள்ள ஜிகேஎம் பேலஸில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.