
திருவாரூர்: ராசி மணலில் அணை கட்டினால் 62 டிஎம்சி தண்ணீரை சேமிக்க முடியும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆதரவு தெரிவித்து பேசினார்.
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, திருவாரூரில் இன்று விவசாயிகளை சந்தித்தார்.