• July 21, 2025
  • NewsEditor
  • 0

இந்த ஆண்டின் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கியது.

ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில், ஆபரேஷன் சிந்தூர், பீகாரில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, கீழடி ஆய்வறிக்கை உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து கேள்விகள் எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராக இருக்கின்றன.

அதே சமயம், இந்தக் கூட்டத்தொடரில் நிதி, வருமான வரி, விளையாட்டு, கல்வி, சுரங்கம், கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட துறை சார்ந்த 15 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்யவிருக்கிறது.

அவற்றில் 8 மசோதாக்கள் புதியவை, 7 மசோதாக்கள் ஏற்கெனவே நிலுவையில் இருப்பவை. அவை என்னென்ன மசோதா என்பதை வரிசையாகக் காணலாம்.

நாடாளுமன்றம்

புதிய மசோதாக்கள்:

நிதி மற்றும் வணிகம்:

* மணிப்பூர் சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதா 2025. இந்த மசோதாவானது, மாநில ஜிஎஸ்டி சட்டத்தை மத்திய சட்டத்துடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டது.

* வரிவிதிப்பு சட்டங்கள் திருத்த மசோதா 2025 – ஏற்கெனவே வரிவிதிப்பு சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவருதல்.

* ஜான் விஸ்வாஸ் (விதிகள் திருத்தம்) மசோதா 2025 – இணக்கச் சுமைகளைக் குறைப்பதன் மூலம் வணிகம் செய்வதை எளிதாக்கும் முயற்சி.

கல்வி:

* இந்திய இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மேண்ட் திருத்த மசோதா 2025 – IIM கவுகாத்தி இந்திய இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மேண்ட் சட்டம், 2017-ன் பட்டியலில் சேர்க்க முன்மொழிதல்.

கலாசாரம்:

* புவி மரபுரிமை தளங்கள் மற்றும் புவி நினைவுச்சின்னங்கள் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) மசோதா 2025 – ஆராய்ச்சி, கல்வி மற்றும் சுற்றுலாவிற்கான புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த தளங்களைப் பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கம்.

சுரங்கம்:

* சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2025 – முக்கியமான கனிமங்களை மீட்டெடுத்தல், விரிவாக்கப்பட்ட சுரங்க குத்தகைகள் மற்றும் தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளையை வலுப்படுத்துதல்.

நிலக்கரி சுரங்கம்
நிலக்கரி சுரங்கம்

விளையாட்டு:

* தேசிய விளையாட்டு ஆளுகை (Governance) மசோதா 2025 – விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களின் நலன் மீதான நடைமுறைகளை மேம்படுத்துதல்.

* தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு (Anti-Doping) திருத்த மசோதா 2025 – உலக ஊக்கமருந்து எதிர்ப்பு ஏஜென்சி (WADA)குறியீடு மற்றும் உலக தர நிலைகளுக்கு ஏற்ப ஊக்க மருந்து எதிர்ப்பு சட்டம் 2022-ஐ கொண்டுவருதல் மற்றும் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு மேல்முறையீட்டுக் குழு சுயாதீனமாகச் செயல்படுவதை உறுதி செய்தல்.

நிலுவையிலுள்ள மசோதாக்கள்:

நிதி:

* வருமான வரி மசோதா 2025 – வருமான வரி சட்டம் 1961-ஐ எளிமைப்படுத்துதல்.

உள்துறை விவகாரங்கள்:

* கோவா பழங்குடியினர் பிரதிநிதித்துவ மசோதா 2024 – சட்டமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பதன் மூலம் கோவா சட்டமன்றத்தில் பழங்குடியினருக்கு உரிய இடங்களை ஒதுக்க முன்மொழிதல். (மக்களவையில் நிலுவையில் உள்ளது).

சரக்கு கப்பல்
சரக்கு கப்பல்

கப்பல் போக்குவரத்து:

* இந்திய துறைமுக மசோதா 2025 – இந்திய துறைமுகச் சட்டம் 1908-ல் மாற்றம் கொண்டு வருதல், கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சில் மற்றும் மாநில கடல்சார் வாரியங்கள் உள்ளிட்ட புதிய ஒழுங்குமுறை அமைப்புகளை நிறுவுதல்.

* வணிகக் கப்பல் மசோதா 2024 – கப்பல் பதிவு, கடல்சார் பயிற்சி மற்றும் மாலுமி நலன் தொடர்பான விதிகளை மேம்படுத்துதல். (மக்களவையில் நிலுவையில் உள்ளது).

* கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா 2024 – உள்நாட்டு கடலோர கப்பல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறது. (மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது).

* கடல் வழியாக பொருள்களை கொண்டு செல்வதற்கான மசோதா 2024 – 1925 சட்டத்தை நவீனப்படுத்துதல். (மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது).

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

* சரக்கு போக்குவரத்து மசோதா 2024 – காலாவதியான இந்திய சரக்கு போக்குவரத்து மசோதா, 1856-ஐ கப்பல் ஆவணங்களை வழங்குவதற்கான புதுப்பிக்கப்பட்ட சட்ட கட்டமைப்புடன் மாற்றுதல். (மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது).

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *