
சென்னை: உலக அளவில் காவல் துறையினருக்கான விளையாட்டு போட்டியில் 50 பதக்கங்கள் பெற்று தமிழக காவல்துறை அணி பெருமை சேர்த்துள்ளது. அந்த அணியினரை டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டினார்.
உலக அளவில் காவல் மற்றும் தீயணைப்பு துறையினருக்கான விளையாட்டு போட்டிகள் (2025), அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி முதல் இந்த மாதம் 6-ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் அகில இந்திய காவல்துறை விளையாட்டு அணி சார்பாக தமிழக காவல் துறையிலிருந்து காவலர்கள் தினேஷ், அர்ஜூன் மற்றும் ஹரிகிருஷ்ணன், பெண் காவலர்கள் இளவரசி மற்றும் சரண்யா பங்கேற்று முறையே 3- தங்கம், 4 வெள்ளி மற்றும் 4-வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை வென்றுள்ளனர்.