
சென்னை: மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்ய ஜூலை 25, 26-ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று பதிவுத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பதிவுத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் திருமணத்தை பதிவு செய்ய, பத்திர பதிவுத் துறையால் கடந்த 2018-ம் ஆண்டு ஒரு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. 2018 டிசம்பர் 10-ம் தேதி முதல், திருமண தரப்பினர் இணைய வழியில் விண்ணப்பித்து, திருமண பதிவுகள் நடந்து வருகின்றன.