
சென்னை:தமிழகத்தில் குற்றங்களை தான் கட்டுப்படுத்த முடியவில்லையென்றால், பெருகி வரும் குப்பையை கூடவா தடுக்க இயலாது என தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன்: மத்திய அரசால் வெளியிடப்பட்ட தூய்மை நகரங்கள் பட்டியலில் தேசிய அளவிலான நகரங்களின் தரவரிசையில் சென்னை 38-வது இடத்தையும், மதுரை 40-வது இடத்தையும் பெற்றிருப்பது மிகுந்த கவலையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. தமிழகத்தின் ஒரு நகரம் கூட தூய்மை நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் வரவில்லை.