
சென்னை: பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் க.பாலு நேற்று வெளியிட்ட அறிக்கை: உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு 1,200 நாட்களுக்கு மேலாகி யும் உள்இடஒதுக்கீடு வழங்க திமுக அரசு மறுக்கிறது. எனவே, திமுக அரசைக் கண்டித்தும், உடனடியாக வன்னியர் உள் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஜூலை 20-ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள நகராட்சித் திடலில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடைபெற உள்ளது. பாமக தலைவர் அன்புமணி, போராட்டத்துக்கு தலைமை வகித்து உரையாற்றுகிறார்.