
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி – பத்மாவதி தம்பதிக்கு பிறந்தவர் மு.க.முத்து(77). இவர் கருணாநிதியின் மூத்த மகன் ஆவார். வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் மு.க.முத்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று காலை காலமானார். இதையடுத்து, அவரது உடல் அஞ்சலிக்காக ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது அண்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.