
சென்னை: இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவர்கள் நியமனத்துக்கான தேர்வு நடைமுறைகள் முடிந்த பின், காலியிடங்களின் எண்ணிக்கையை 35-ல் இருந்து 54 ஆக அதிகரித்து மருத்துவ தேர்வு வாரியம் பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக இருந்த மூன்று இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று மருத்துவ தேர்வு வாரியம், 2020 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. கரோனா ஊரடங்கு காரணமாக அப்போது தேர்வு நடத்தப்படவில்லை.