
இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில்லுக்கு, கேப்டனாக தன்னை நிரூபிக்க வேண்டிய ஒரு சோதனைத் தொடராக இங்கிலாந்து டெஸ்ட் தொடர் அமைந்திருக்கிறது.
டெஸ்ட் தரவரிசையில் முதல் முறையாக இந்திய அணியை முதலிடத்துக்குக் கொண்டு சென்ற தோனி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்குள் ஆக்ரோஷ அணுகுமுறையைப் பாய்ச்சி தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக அணியை முதலிடத்தில் வைத்திருந்த கோலி ஆகியோர் அலங்கரித்த கேப்டன் பதவி என்பதால் இப்போதே கில்லின் ஒவ்வொரு அணுகுமுறையும் முன்னாள் கேப்டன்களுடன் ஒப்பிடப்படுகிறது.
குறிப்பாக, பேட்டிங்கில் கோலியின் இடத்தில் இறங்குவதாலும், களத்தில் அவ்வப்போது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதாலும் அடுத்த கோலி இவர்தான் எனப் பேசப்படுகின்றன.
இந்த ஒப்பீடுகளே கில் கில்லாகச் செயல்படுவதற்கு அவர் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், தோனியாகவோ கோலியாகவோ கில் ஆக முடியாது எனக் கூறியிருக்கிறார்.
ஸ்போர்ட்ஸ் டாக் ஊடகத்திடம் பேசிய ஹர்பஜன் சிங், “ஒவ்வொரு வீரருக்கும் வித்தியாசமான அணுகுமுறை இருக்கும்.
தோனி, கும்ப்ளே, கங்குலி, கபில்தேவ் ஆகிய அனைவரும் வெவ்வேறு விதமானவர்கள்.
எல்லோருக்கும் வித்தியாசமான குணமும் பாதையும் இருக்கும்.

பிரசன்னா அல்லது சாக்லைன் முஷ்டாக் போல நான் பந்துவீச விரும்பினால் அது சாத்தியப்படாது.
கில் தனக்கென்று ஒரு பாணி கொண்டிக்கிருக்கிறார். அவரால் கங்குலியாகவோ, தோனியாகவோ, கோலியாகவோ ஆக முடியாது.
அப்படி ஆக வேண்டிய அவசியமும் இல்லை. இந்தியாவை உச்சத்திற்குக் கொண்டு செல்லும் ஆற்றல் அவருக்கு உள்ளது” என்று கூறினார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 2 – 1 என இந்தியா பின்தங்கியிருக்கும் நிலையில், களத்தில் ஒரு கேப்டனாக சுப்மன் கில்லின் அணுகுமுறை குறித்து தங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடவும்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…