
சென்னை: திமுக கூட்டணி குறித்து விமர்சிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு செயல்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக கூட்டணி குறித்து பேச அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு செயல்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு யார் கொடுத்திருக்கிறார் என்பது தெரியாது. ஆனால் மக்களை சந்திக்கும் அவர் மக்கள் சார்ந்த பிரச்சினைகள் குறித்து பேசுவதை விட திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது அல்லது விமர்சிப்பது என்ற நிலையில் உரையாற்றுகிறார்.