
புதுடெல்லி: போதைப் பொருள் இல்லாத இந்தியாவுக்கான பிரச்சாரத்தில் நாட்டு மக்கள் இணைய வேண்டும் என்றும், மத, சமூகத் தலைவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு இயக்கத்தில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா கேட்டுக்கொண்டுள்ளார்.
'போதைப் பொருள் ஒழிப்பு' என்ற கருப்பொருளுடன் 2 நாள் இளைஞர் ஆன்மிக உச்சி மாநாடு வாரணாசியில் இன்று தொடங்கியது. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் நடைபெறும் இந்த மாநாட்டை துறையின் அமைச்சர் மன்சுக் மண்டவியா தொடங்கிவைத்தார். இந்த உச்சி மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து 122 ஆன்மிக, சமூக – கலாச்சார அமைப்புகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.