
மும்பை ரயில் நிலையங்களில் பொதுவாகவே எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். மும்பை புறநகரில் உள்ள திவா ரயில் நிலையத்திலிருந்து மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதிக்கு நீண்ட தூர ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்டுள்ளார். அப்பெண்ணை ஒருவர் பிடித்து ரயில் தண்டவாளத்தில் தள்ளினார். அந்நேரம் அந்த வழியாக வந்த சரக்கு ரயில் ஒன்று அப்பெண் மீது மோதியதில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
அப்பெண்ணும் அந்த நபரும் ரயில்வே பிளாட்பாரத்தில் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். அந்தச் சண்டை முற்றியபோது கோபத்தில் அந்த நபர் அப்பெண்ணை தண்டவாளத்தில் பிடித்துத் தள்ளியதாகத் தெரிய வந்தது.
இதனை அருகில் உள்ள பிளாட்பாரத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி 5வது பிளாட்பாரத்த்தில் பெண் ஒருவரை, ஒருவர் கழுத்தை நெரித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தார். அப்பெண் தன்னை விடுவித்துக்கொள்ளப் போராடிக்கொண்டிருந்தார்.
ஆனால் அந்த நபர் அப்பெண்ணைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக்கொள்ள முயன்றார். இம்முயற்சி தோல்வி அடைந்ததால் கோபத்தில் பெண்ணை ரயிலில் தள்ளி கொலை செய்துள்ளார். அப்பெண் ரயிலில் அடிபட்டு இறந்தவுடன் அவரை ரயிலில் தள்ளி கொலை செய்த நபர் ரயில் தண்டவாளத்தில் நடந்து தப்பிச்செல்ல முயன்றார்.
அதற்குள் துப்புரவுத் தொழிலாளர் ரயில் நிலையத்தில் பணியிலிருந்த ரயில்வே போலீஸாரை உஷார் படுத்தினர். ரயில்வே போலீஸார் அவரைப் பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் ராஜன் என்று தெரிய வந்தது.
அதிகாலை நேரத்தில் தனியாக நடந்து வந்த பெண்ணை ரயில் நிலையத்திற்கு ராஜன் பின் தொடர்ந்து வந்துள்ளார். இருவருக்கும் ஏற்கனவே அறிமுகம் கிடையாது. ஆனால் அப்பெண்ணைப் பின் தொடர்ந்து சென்று அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.

அதற்கு அப்பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்று விசாரணையில் தெரிய வந்தது. உயிரிழந்த பெண் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இது குறித்து ரயில்வே போலீஸார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ”ராஜனும், அப்பெண்ணும் ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டிருந்தனர். அது அவர்களுக்குள் வாக்குவாதமாக மாறியது. அந்நேரம் அப்பெண்ணைப் பிடித்து கீழே தள்ள ராஜன் முயன்றார்.
ஆனால் அப்பெண் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அப்பெண்ணை பிளாட்பாரம் ஓரத்திற்கு இழுத்துவந்து தண்டவாளத்தில் பிடித்துத் தள்ளிவிட்டார்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.