
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 19) காலமானார். அவருக்கு வயது 77.
அரசியல் தலைவர்களும் திரையுலகினரும் மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சத்யராஜ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சத்யராஜ், “அண்ணன் மு.க முத்துவின் இறப்புக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.
மு.க முத்துவின் ‘பிள்ளையோ பிள்ளை’ படத்தை கோயம்புத்தூரில் முதல் நாள் பார்த்த ஞாபகம் இருக்கிறது. அவர் எனக்கு நல்ல பழக்கம்.
கோயம்புத்தூர் அரசு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது கல்லூரிக்கு எதிரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார்.
அப்போது அவரிடம் சென்று ஆட்டோகிராப் எல்லாம் வாங்கி இருக்கிறேன். அதெல்லாம் பசுமையான நினைவுகள்.
அவரை இழந்த குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…