
இமாச்சல் பிரதேசத்தில் பாலியாண்ட்ரி என்ற பழமையான பாரம்பர்யத்தைப் பின்பற்றி, இரு சகோதரர்கள் ஒரே பெண்ணை மணந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.
இந்தத் திருமணம், பழங்கால பாரம்பர்யத்தைப் பின்பற்றுவதாகவும், தங்கள் கலாசாரத்தைப் பெருமையுடன் கொண்டாடுவதாகவும் அந்தச் சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.
இமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளில், குறிப்பாக கின்னார் மற்றும் லாஹவுல்-ஸ்பிடி போன்ற பகுதிகளில் பாலியாண்ட்ரி நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த மரபின்படி, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஒரே பெண்ணை மணந்து, கூட்டாக வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
இந்த முறை, பொருளாதார மற்றும் சமூக காரணங்களால், குறிப்பாக நில உடைமைகளைப் பிரிக்காமல் ஒருங்கிணைத்து வைத்திருக்க உதவுவதாகக் கூறுகின்றனர்.
திருமணம் குறித்து சகோதரர்களில் ஒருவர் கூறுகையில், “இது ஒரு பரஸ்பர முடிவு, எங்கள் பாரம்பர்யத்தைப் பின்பற்றுவது எங்களுக்குப் பெருமை அளிக்கிறது.
இது எங்கள் கலாசாரத்தின் ஒரு பகுதி, இதை நாங்கள் மனதார கொண்டாடுகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
மணமகளும், ”நான் ஒருபோதும் வற்புறுத்தப்படவில்லை. இந்த மரபை ஏற்று, குடும்பத்துடன் இணைந்து வாழ எனக்கு மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.
மூன்று நாள்கள் நடக்கும் இந்தத் திருமணச் சடங்குகளில் பக்கத்துக் கிராமத்திலிருந்து பல கிராமவாசிகள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
திருமணத்திற்கு வந்த விருந்தினர்களுக்குப் பாரம்பர்ய டிரான்ஸ்-கிரி உணவு வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திருமண முறைக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.