
மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பிளாக்மெயில்’.
தேஜு அஸ்வினி, பிந்து மாதவி, திலக் ரமேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். சாம் சி.எஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
இப்படம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று ( ஜூலை 19) நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்வில் பேசிய வசந்த பாலன், “என்னிடம் ஜி.வி.பிரகாஷ் வரும்போது சின்ன பையனாகத்தான் இருந்தார். 17 வயதில் பார்த்த ஜி.வியின் வளர்ச்சியை இப்போது பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
எனக்கு ஜிவி-யுடன் பணிபுரிய ஒரு வாய்ப்பு கிடைத்தது என்று பெருமையாக நினைப்பேன்.
நான் ஜிவி-யை வைத்து படம் எடுக்கவில்லை என்றாலும் வேறு யார் மூலமாவது ஜிவி இந்த இடத்தைப் பிடித்திருப்பார்.
யாரையும் வெறுக்காத, யாரிடமும் கோபம் கொள்ளாத, யாரிடமும் மோசமாக நடந்துக்கொள்ளாத ஒரு குணத்தை ஜி.வி-யிடம் நான் பார்த்திருக்கிறேன்.
சமீபத்தில் அவருடைய குடும்பப் பிரச்னையில் எவ்வளவு நாகரீகமாக நடந்துகொண்டார் என்பதை ஒரு வீடியோவில் பார்த்தேன்.
பிறகு அவரைத் தொடர்புகொண்டு ஆச்சரியமாக இருக்கிறது ஜி.வி இந்த வயதில் இவ்வளவு நாகரீகமாக நடந்துகொள்கிறாய் என்று சொன்னேன்.

இந்த மாதிரியான ஒரு நபர் இன்டஸ்ட்ரியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
இந்தப் பேரன்பிற்காக அவர் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் பெரிய இடத்தைத் தொட வேண்டும்.
ஜி.விக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் நிச்சயம் வெற்றி அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று ஜி.வி-யைப் பாராட்டி பேசியிருந்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.