
மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பிளாக்மெயில்’.
தேஜு அஸ்வினி, பிந்து மாதவி, திலக் ரமேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். சாம் சி.எஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று (ஜூலை-19) நடைபெற்றிருக்கிறது.
விழாவில் ஜி.வி.பிரகாஷ், “பிளாக்மெயில் ஒரு இன்ட்ரஸ்டிங்கான கதை. மாறன் சார் ஒன் லைன் சொல்லும்போதே எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. அவர் மிகவும் திறமையான ஒரு இயக்குநர்.
அவருடைய குரு கே.வி ஆனந்த் சார் மாதிரி நல்ல இடத்திற்கு செல்வார். இந்தப் படத்தில் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும். படக்குழுவினருக்கு நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…