
சென்னை: சென்னையில் மதிமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் அணிச் செயலாளர் ப.த.ஆசைத்தம்பி தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் முதன்மைச் செயலர் துரை வைகோ சிறப்புரையாற்றினார்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: அமைப்பு ரீதியான மாவட்டங்கள் அனைத்திலும் ஒன்றியம், நகரம், பகுதி அளவில் இளைஞரணி அமைப்பாளர்களை மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் நியமிக்க வேண்டும்.