
சென்னை: கோவை ஜெம் மருத்துவமனை மற்றும் ராமகிருஷ்ணா மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகி அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு முதல்முறையாக, அவர்களின் மனைவிகளிடம் இருந்து கல்லீரல்கள் தானமாகப் பெறப்பட்டு பரஸ்பரம் முறையில் மாற்றி (ஸ்வாப்) பொருத்தப்பட்டது.
இது தொடர்பாக ஜெம் மருத்துவமனை தலைவர் மருத்துவர் சி.பழனிவேலு, ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 59 வயது நபர் ஒருவர் ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் நாள்பட்ட கல்லீரல் செயலிழப்புக்கு (சிரோசிஸ்) ஆளாகியிருந்தார்.