
இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 68.
வேலு பிரபாகரன், ஒளிப்பதிவாளராக சினிமாவில் அறிமுகமானார். பின்னர் பிக்பாக்கெட், உருவம், உத்தமராசா உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள இவர், பிரபு நடித்த ‘நாளைய மனிதன்' என்ற படம் மூலம் இயக்குநர் ஆனார். இதைத் தொடர்ந்து ‘அதிசய மனிதன்' என்ற படத்தை இயக்கினார். பின்னர் ‘அசுரன்', ‘ராஜாகிளி', ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், கடாவர், பீட்சா 3,ரெய்டு, வெப்பன், கஜானா உள்பட பல படங்களில் நடித்தார்.