
பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபரும், கன்னட நடிகருமான ரெட் அண்ட் ஒயிட் செவன்ராஜ் தயாரிக்கும் படம், ‘குப்பன்’. கடந்த 35 வருடங்களாக கன்னட படங்களில் நடித்து வரும் செவன்ராஜ், 4 கன்னடபடங்களையும் ஒரு மலையாளப் படத்தையும் தயாரித்துள்ளார். ‘குப்பன்’ மூலம் தமிழுக்கு வந்துள்ளார். இதில்' ஜெய் பீம்' மொசக்குட்டி, சிபு சரவணன், ஆதித்யா வினோத்,செவன்ராஜ், டாக்டர் முகமத்கான், பவித்ரா, பன்னீர், ஸ்ரீராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சசிகுமார். எஸ் இயக்கியுள்ளார்.
ஒரு தந்தை மற்றும் அவருடைய மகளுக்கு இடையேயான பாசப்பிணைப்பைச் சொல்லும் படமான இதன் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.படம் பற்றி பேசிய இயக்குநர் சசிகுமார். எஸ், "தனதுதந்தையை, தான் பெறாத குழந்தையாக கருதி உள்ளத்தில் சுமக்கும் ஒரு மகள், திடீரென்று காணாமல் போகிறாள். அவளைத் தேடும் தந்தையின் பயணமும் அவர்தேடுதல் வெற்றி பெற்றதா என்பதும் கதை. உணர்ச்சிகரமான இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும்" என்றார். கிரண் கஜா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தின் பாடல்களுக்கான இசையை சந்தோஷ் ராமும் பின்னணி இசையை கலைவாணன் இளங்கோ வழங்குகின்றனர்.