
மோட்டிஹரி: நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்கள் வளர்ச்சி பெறுவதற்கு பிஹார் வளர்ந்த மாநிலமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், “20 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பிஹாரில் லட்சாதிபதிகளாக முன்னேறி இருக்கிறார்கள். இது மத்திய அரசின் நடவடிக்கைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி” என்று பெருமிதமாக கூறியுள்ளார்.
பிஹாரின் மோடிஹரி நகரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "கடந்த காலத்தில் மேற்கத்திய நாடுகள் வளர்ச்சி கண்டதைப் போல தற்போது கிழக்கு நாடுகள் வளர்ந்து வருகின்றன. நாட்டின் கிழக்குப் பகுதி வளர்ச்சி பெறுவதற்கு, பிஹார் வளர்ந்த மாநிலமாக இருக்க வேண்டும். மோட்டிஹரியை நாம் மும்பையைப் போல உருவாக்க வேண்டும்.