
புவனேஸ்வர்: ஒடிசாவின் பாலசோர் நகரில் உதவி பேராசிரியர் ஒருவரின் பாலியல் தொல்லை காரணமாக கல்லூரி மாணவி ஒருவர் தீக்குளித்து இறந்தார். மாணவிக்கு நீதி கேட்டு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், ஆர்ஜேடி உள்ளிட்ட 8 கட்சிகள் சார்பில் நேற்று காலை 6 முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர முழு அடைப்பு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனால் புவேனஸ்வர், கட்டாக் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடின. ரயில் மறியல் காரணமாக சில இடங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.