
ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ’டி.என்.ஏ’ திரைப்படம் ஜூலை 19-ம் தேதி வெளியாகிறது.
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான படம் ‘டி.என்.ஏ’. ஜூன் 20-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இப்படம் வெளியீட்டுக்கு முன்பே ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமை விற்கப்பட்டுவிட்டது.