
சென்னை: ரஜினிகாந்த் ‘பாட்ஷா’வாக நடிக்கவில்லை, மாறினார் என்று இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான ‘பாட்ஷா’ படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு சுரேஷ் கிருஷ்ணா தனது எக்ஸ் தளத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் “ஒரு புகழ்பெற்ற படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதை கொண்டாட வேண்டிய நேரம் இது.