
சென்னை:‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பில், அடுத்த 30 நாட்களில் திமுகவில் 2.50 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
இத்தேர்தலில் வெற்றிபெறும் முனைப்பில் ஆளும் திமுக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.