
சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 17) 6 வார்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், மாதவரம் மண்டலம், 32-வது வார்டு, சூரப்பட்டு சந்திப்பு, அம்பத்தூர்- ரெட்ஹில்ஸ் சாலையில் உள்ள ஸ்ரீவரத மஹாலில் நடைபெற உள்ளது.